வெலிகமையில் இருதரப்பு கைகலப்பு – புத்தர் சிலைக்கு சேதம்



வெலிகம பிரதேசத்தில் இடம் ஒன்றின் உரிமை தொடர்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவ்விடத்திலிருந்த புத்தர் சிலை ஒன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

காலி ,மாத்தறை பிரதான வீதியின் வெலிகம ரெஸ்ட் ஹவுஸ் சந்திக்கு அருகாமையிலுள்ள புத்தர் சிலையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது..

நேற்று இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்தின் உரிமை தொடர்பில் பல தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக கருத்து முரண்பாடு இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.