அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களிலும் இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப்பின், சமீபத்திய கேள்வி பதில்கள் (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வாட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வாட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாது.

பயனாளர்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, தங்களுடைய போன் எந்த வெர்ஷனில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு Settings பிரிவுக்குள் சென்று Phone>About என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஸ்மார்ட்போன் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது காட்டப்படும். ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் இருந்தால், அந்த போனில் அடுத்த வருடம் வாட்ஸ்அப் வேலை செய்யாது.

ஆண்ட்ராய்டு 4.03 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போனில் தான் வருங்காலத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யும். வாட்ஸ்அப்பை புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் இருந்தால், அதற்கு ஏற்றவாறு ஆண்ட்ராய்டு வெர்ஷனும் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டே அப்டேட் செய்யப்படுகிறது.

இப்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரிடத்திலும் வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப் இல்லாத தினசரி வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. எனவே, பயனாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அடுத்த வெர்ஷனுக்கு மாற்றுவதன் மூலம் வாட்ஸ்அப்பின் இந்த கெடுபிடியில் இருந்து தப்பிக்கலாம்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.