மரணதண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது - பிரதமர் திட்டவட்டம்


ஜனாதிபதியின் மரண தண்டனைத் தீர்மானத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னணி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான எதிர்க் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆரம்பத்தில் அமைச்சரவையிலும் அடுத்ததாக ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோருடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

மொனராகல மாவட்ட மாரிஅராவ நீர்த் திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று(30) கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.