நாவலப்பிட்டியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு; பலர் காயம்



நாவலப்பிட்டி - வெஸ்டோல் தோட்டப் பிரிவில், குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது,ஏழு பேர் மீது குளவி கொட்டியுள்ளதாகவும், பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

இதற்கமைய, ஐவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன் ஒருவர் தொடர்ந்தும்  சிகிச்சை பெற்று வருவதாக  நாவலப்பிட்டி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

59 வயதையுடையவரும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான ஒருவரே,சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை,நாவலப்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.