உணவு தவிர்ப்பு போராட்டத்தை ரத்ன தேரர் கைவிட்டுள்ளார்...!


நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

இந்த உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் M.LA.M.ஹிஸ்புல்லா  மற்றும்  அமைச்சர் ரிசாட் பதியூதின் ஆகியோர்  பதவி விலக வேண்டுமென கோரி   அத்துரலிய ரதன தேரர்  கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். 

இந்தநிலையில் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் M.LA.M.ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவி விலகினர்.

இதன் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.