முஸ்லிம் அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்; அனைவரும் கண்டிக்கு வாருங்கள் - பொதுபலசேனா


நாட்டில் தற்போது முஸ்லிம் அடிப்படைவாதப் பிரச்சினை மிகவும் முக்கியமானதாக மாறியிருப்பதாகவும், அதனைத் இல்லாதொழிக்க பரந்த வேலைத்திட்டம் ஒன்று அவசியம் எனவும் தெரிவித்துள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இவை தொடர்பில் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதற்கும், யோசனைகளை முன்வைப்பதற்கும் அனைவரையும் கண்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் தோன்றியுள்ள அடிப்படைவாதப் பிரச்சினையை முழுமையாக இல்லாதொழிப்பது குறித்து ஆராய்தல், யோசனைகளை முன்வைத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு பௌத்த தேரர்கள், பொதுமக்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கண்டியில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை முஸ்லிம் அடிப்படைவாதப் பிரச்சினை முழுமையாகக் களைவதற்கு பாரம்பரிய முஸ்லிம்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.