ரிஷாத்துக்கு எதிராக எஸ்.பி, டிலான் பொலிஸ் தலை மையகத்தில் முறைப்பாடு


விமல் வீரவன்ச மற்றும்   எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறைப்பாடு செய்திருந்த நிலையில், ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர், எஸ்.பி.திஸாநாயக்கவும் டிலான் பெரேராவும் பொலிஸ் தலை மையகத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்தனர்.

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் முன்னாள் அமைச்சருக்கு நெருங்கிய தொடர்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்துவந்ததுடன், பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு சதொச வாகனங்களையும் போக்குவரத்துக்காக வழங்கியுள்ளதாகவும் கூறியிருந்தார். விமல் வீரவங்சவின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள ரிஷாட் பதியுதீன் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளை பதிவுசெய்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தொடர்புள்ளதாக வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.