ஐ.எஸ். ஐ.எஸ். இற்கு எதிராக ஆனமடுவ முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்.



புனித நோன்புப் பெருநாள் தொழுகையை நேற்று(05) காலை நிறைவு செய்த பின் ஆனமடுவ முஸ்லிம்கள், சங்கட்டிகுளம் முஸ்லிம் பள்ளிவாயலுக்கு முன்னால் வந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்லர். நாம் இலங்கையர்கள் என இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தையடுத்து ஆனமடுவ சங்க சபையின் பதிவாளர் வடத்த சோமானந்த தேரர் அந்தப் பிரதேசத்துக்கு வருகை தந்து உபதேசம் புரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.