நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று.


ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பில் தீர்மானிப்பதற்கான விசேட மாநாடு இன்று (04) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பிறை குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகள், மேமன் சங்க உறுப்பினர்கள், ஹனபி பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் ஷவ்வால்  தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக  நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

அதேவேளை, பிறைக்குழுவினால் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.