பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவருக்கும் விரைவில் விடுதலை - ஜனாதிபதி



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சிறு குற்றங்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின்போதே அவர் குறித்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைக் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.

சமய நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் சந்திப்புகள் நடைபெறும் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டோரும், பாதுகாப்புத்துறை பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.