அரச துறை உத்தியோகத்தர்களின் ஆடை சம்பந்தமாக சுற்றறிக்கையில் மாற்றமில்லை.



அரச துறை உத்தியோகத்தர்கள் சம்பந்தமாக வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை திருத்தம் செய்வதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது. 

அந்த சுற்றறிக்கையை திருத்தம் செய்வதற்கோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அந்த சுற்றறிக்கைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

கடந்த 17ம் திகதி சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டது. 

எவ்வாறாயினும் வெவ்வேறு இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

இதேவேளை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை பின்பற்ற தேவையில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.