பட்டப் பகலில் முஸ்லிம் வர்த்தகர் மீது கத்தியால் குத்திக் கொலை; தெஹிவளையில் சம்பவம்.


தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், அதன் உரிமையாளரிடம் கப்பம் கேட்டபோது அதனை வழங்க மறுத்ததால் குறித்த மர்ம நபர் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

குறித்த  சம்பவம் இன்று (24) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

இந்நிலையில் குறித்த சம்பவத்தில்  வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான அப்துல் அசீஸ் (60) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதன்போது  காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது அவர் தனியாகவே வர்த்தக நிலையத்தில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.