அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

அமைச்சரான ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநரான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு வழியுறுத்தி அத்துரலிய ரத்ன தேரர் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அத்துரலிய ரத்ன தேரர் ஜனாதி,பிரதமருக்கு 4 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

இஸ்லாமிய அடிப்படைவாததிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை  வேண்டுமென அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அடிப்படைவாதத்திற்கு ஆதரவளிக்கும் சிலர் பொதுமக்களின் ஒற்றுமையை சீர் குழைக்கும் வகையில் கருத்துகளை பரப்புகின்றனர் என தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்கள்,தமிழ் மக்கள்,நடுநிலையான முஸ்லிம் மக்களும் சமாதானத்தை பாதுகாப்பதற்கு அர்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

இந்நிலையில் அடிப்படைவாதத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் இவ்வாறு நடந்து கொள்பவர்களுக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.