இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் முடிகிறது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹா 
ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய, பொலிஸ் தலைமையகம் வழங்கியிருந்த கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடையவுள்ளது.

இதற்கமைய, இன்று மாலை 4 மணிவரை, முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த மூவருக்கு எதிராக, நேற்றைய தினம் வரை 11 முறைப்பாடுகள் கி​டைக்கப்பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ​ரிஷாட்டுக்கு எதிராக நேற்று முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.