நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளை கண்டித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிப் பேரணி

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கும் அதனைத் தொடர்ந்து மே மாதம் 13ம் திகதி நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளையும் கண்டித்து "இன்னுமொரு யுத்தம் வேண்டாம்" 'சிங்கள ,தமிழ், முஸ்லிம் மக்கள் இனவாத மதவாத மரணப்பொறியில் அகப்படாமல் இருப்போம்' எனும் தொனிப்பொருளில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று(23) கலஹா சந்தியில் தீவிரவாதத்திற்கும், இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்களால் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் சிங்கள, தமிழ் ,முஸ்லிம் என்ற ரீதியில் சகல மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் பேராதனைப் பல்கலைக்கழகத்தி
ல் மூவின மக்களும் புரிந்துணர்வோடும், ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர் என்பதனை சமூகத்திற்கு எடுத்துக்காட்டு
வதாகவும் இந்த அமைதிப் பேரணி அமைந்திருந்ததுடன் பேராதனைப் பல்கலைக்கழகம் தொடர்பில் பல போலிப் பிரச்சாரங்களை ஏற்படுத்திய சகலருக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும் முகமாக இது விளங்குவதாக கலந்து கொண்ட மாணவர்கள் குறிப்பிட்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.