இனி ஓய்வெடுக்க நேரமில்லை ஆபத்து நீங்கும் வரை செயற்பட தீர்மானித்துள்ளேன் - ஞானசாரதேரர்

தமது போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கபோவதாக கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை பெற்று வந்தபோது, தியானங்களும், வழிபாடுகளுடன் ஒரு ஓரமாக இருப்பதற்கு தீர்மானித்திருந்த போதும், தன்னை சுற்றியிருந்த இளைஞர்களின் முகத்தில் தெரிந்த விரக்தி தன்னை மீண்டும் போராட்டத்திற்கு இட்டு சென்றுள்ளதாக ஞானசாரதேரர் குறிப்பிட்டுள்ளார்.

தான் விடுதலை பெற்று வந்தது, வீட்டுக்கு தங்களின் தந்தை வந்தது போன்று உணர்வதாக சிலர் தனக்கு எழுதியனுப்பியுள்ளதாகவும்,  ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

எனவே இளைஞர்களின் இந்த கோரிக்கைக்கு மாறாக செயற்பட முடியாத நிலையில், நடப்பது நடக்க வேண்டியதே என்றும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை முற்றாக இல்லாது செய்யும் வரையில் தாம் போராட தீர்மானித்துள்ளதாகவும், கலகொட அத்தே ஞானசாரதேரர் இதன்போது கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.