மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை! - ஜனாதிபதி


மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை (Batticaloa Campus) உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரவும் அதன் செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது , கடந்த 26ம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிற்கு சென்று ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதேபோல், பயங்கரவாதம் உலகில் எங்கும் வெற்றிப்பெற்றதில்லை என தெரிவித்த ஜனாதிபதி கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இலங்கை நாட்டின் பிரச்சினை மாத்திரம் இல்லையெனவும் இது சர்வதேசத்துடன் சம்பந்தப்பட்ட செயற்பாடு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.