குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் தாயாருக்கு நிதி அன்பளிப்பு


அண்மையில் கொழும்பு தெமட்டகொடயில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 10 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பினை நேற்று  (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாரான கே.ஏ.இனோக்கா ஷிரானி உரிய காசோலையை ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதோடு, அவரது குடும்ப உறுப்பினர்களும் இதன்போது வருகை தந்திருந்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.