ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று

புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (05) கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிருவாகிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கமைய, இன்று மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.19 மணி முதல், புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையைப் பார்க்குமாறும், தலைப்பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 011 2432110 என்ற தொலைபேசி இலக்கியத்தின்  ஊடாகவோ அறியத்தருமாறும், சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுள்ளது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.