பிரபல பாதாளக்குழு தலைவர் மாகந்துர மதுஷ் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்த இலங்கையின் பிரபல பாதாளக்குழு​வொன்றின் தலைவரான மாகந்துர மதுஷ் இன்று (05) அதிகாலை 5 மணியளவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரவினரால் பொறுப்பேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப் பொருள் கடத்தல்காரருமான மாகந்துந்துர மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித (40) இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா விமான நிறுவனத்தின் யு. எல். 226 என்ற விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். அவரை மேலதிக விசாரணைக்காக, குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றப்புலனாய்வு தலைமையகத்துக்கு அழைத்துச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளரார்.

பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேர் துபாய் பொலிஸாரால் அந்நாட்டு சட்டத்திற்கமைய கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.