நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் சில அடுத்த வாரம் திறப்பு.


  • சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.

  • பேராதனைப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக  உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

  • கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் அனைத்து பீடங்களுக்கும் முதலாம் ஆண்டு முதலாம் அரையாண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்குரிய கல்விசார் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வளாக முதல்வர் வீ. கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.