அமித் வீரசிங்க மற்றும் நாமல் குமார ஆகியோர் கைது.


அமித் வீரசிங்க மற்றும் நாமல்
மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஊழல் எதிர்ப்பு செயலணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிரதேசங்கள் சிலவற்றில் இடம்பெற்றுள்ள குழப்பகர நிலைமை மற்றும் அமைதியின்மை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக இவர்களை கைதுசெய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றனர்.

மகாசோன் பலகாயவின் தலைவரான அமித் வீரசிங்கவை தெல்தெனிய பகுதியிலும், நாமல் குமாரவை வரக்காபொல பகுதியிலும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள அசம்பாவிதங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக காவல்துறை தலைமையகத்தினால் காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.