பொதுமக்களுக்கு காவற்துறை விடுத்துள்ள கோரிக்கை!

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது இத்தினங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு காவற்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

பழைய சம்பவங்கள் நிகழ்கால சம்பவங்கள் போன்று சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இனங்களுக்கு இடையில், வைராக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்படுகின்றன.

இந்த நிலையில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget