ஜனாதிபதி தேர்தல் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி..!


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, புதுடில்லியில் வைத்து நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், எந்த கட்சியினரும் தமது வேட்பாளர் தொடர்பான தகவலை வெளியிடவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் தான் பங்கு கொள்வதா? என்பது குறித்த தனது முடிவை உடனடியாகவே அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.