வெள்ளவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியை வெடிக்க வைத்த படையினர்


வெள்ளவத்தை - சவோய் திரையரங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியொன்றை பரிசோதிப்பதற்காக அதன் ஆசனம் படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான உந்துர குறித்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து அதனை படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்போது அதன் ஆசனத்தை திறப்பதற்காக வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இல்லை எனவும் காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.