பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி...!


பண்டிகை காலத்தில் பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

பண்டிகை காலத்தின் போது விசேட போக்குவரத்து சேவைகள் அமுல் படுத்தப்படுகிறது.

இந்தநிலையில், இவ்வாறு சேவையில் ஈடுபடும் பேருந்துகளே அதிக கட்டணங்களை அறவிடுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவித்த, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி, அவ்வாறு அதிக கட்டணங்கள் அறவிடப்படும் சந்தர்ப்பத்தில், 1955என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், 0117555555 மற்றும் 0771056032 கைபேசி இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு, சேவைக்காக மேலதிக பேருந்துகள் மற்றும் தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பேருந்துகளில் அதிக போக்குவரத்து கட்டணங்கள் அறவிடப்படும் பட்சத்தில், அவர்களின் வீதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.