இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் விண்வௌியை அடைந்துள்ளது.


இலங்கையின் முதலாவது செயற்கைக் கோளான இராவணா வன் விண்வௌியை அடைந்துள்ளது.

இலங்கையின் முதலாவது செயற்கைக் கோளான இராவணா வன் எந்தவித தடைகளுமின்றி  விண்வௌியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று மாலை 6.30 மணியளவில் விண்வௌியை அடைந்துள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் முதலாவது செயற்கைக் கோளான இராவணா வன் நேற்று முன்தினம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின்  மாணவர்களான தரிந்து ஜயரத்ன மற்றும் துலானி சம்மில்க ஆகியோரினால் இந்த செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த செயற்கைக் கோளை  ஜப்பானின் கியுசு தொழிநுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இவர்கள் இருவரும் ஜப்பானின் கியூசு தொழிநுட்ப நிறுவனத்தில், பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

இராவணா வன் என்ற குறித்த செயற்க்கைக் கோள் அமெரிக்காவின் நாசா ஏவுதளம் ஊடாக நேற்று முன்தினம்அதிகாலை 2.16அளவில் விண்ணுக்குச்  செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget