ஹெம்மாதகம மடுல்போவ சமூக சேவையாளர் ஒருவர் கைது

மாவனல்லை, ஹெம்மாதகமை, மடுல்போவ பிரதேசத்திலுள்ள சமூக சேவையாளர் ஒருவர்  இன்று (24) புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் வரக்காபொலவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர் டுபாய் நாட்டிலிருந்து உதவிகளைப் பெற்று ஹெம்மாதகம மற்றும் இலங்கையின் பல பிரதேசங்களிலும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்ற ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வரக்காபொலயில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செ்யயப்பட்டிருந்ததாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபருக்கு சொந்தமான அதிசுகபோக வேன் ஒன்றும் தொடர்பாடல் கருவிகள் 4 மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் வரக்காபொல பொலிஸார் இணைந்து அங்குருவல்ல வீதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் மடுல்போவ முஸ்லிம் பள்ளிவாயலின் இமாம் என பொலிஸ் தகவல்களை ஆதாரம் காட்டி  சில தேசிய சகோதர ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.