மதூஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தல்.பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (18) காலை வந்தடைந்த இவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்று விசாரணை செய்து வருகின்றனர்.

பியால் புஷ்பகுமார மற்றும் முஹம்மட் ஆப்ரிட் முஹம்மட் இன்ஹாம் ஆகியோரே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி, துபாயிலுள்ள ஆடம்பரக் ஹோட்டலொன்றில் மாகந்துரே மதூஷ் உட்பட 31 பேர் துபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதைத்  தொடர்ந்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுவரையில் 23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.