மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

தற்போது வரை 7 மாகாண சபைகளின் ஆட்சிக்காலங்கள் நிறைவடைந்துள்ளன.

சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஆட்சிக்காலங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தன.

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆட்சிக்காலங்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடைந்தன.

அத்துடன், தென் மாகாணத்தின் ஆட்சிக்காலம், கடந்த 10ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இந்த அனைத்து மாகாணங்களும் தற்போது மாகாண ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

இந்த நிலையில், ஊவா மாகாண சபையின் ஆட்சிக்காலம் மாத்திரமே எஞ்சியுள்ளது.

அதன் ஆட்சிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவடையவுள்ளது.

இவ்வாறான நிலையில், 7 மாகாணங்களின் ஆட்சிக்காலங்கள் நிறைவடைந்துள்ள போதும், மாகாணங்களுக்கான தேர்தல் இதுவரையில் நடத்தப்படாதுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.