நாவலபிட்டியில் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு.


நாவலபிட்டி - கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கம்பளை பகுதியை சேர்ந்த 18 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 3.00 மணியளவில் தனது காதலியுடன் குறித்த மாணவர் அங்கு நீராட சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் இருவரும் நீராடும் போது குறித்த மாணவர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணால் போயுள்ளார்.

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு இருவரும் குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget