விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் செய்மதி.


இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி இன்று அதிகாலை 2.16க்கு அமெரிக்காவிலிருந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் - வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு குறித்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஜப்பானின் கியூஷு பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா - 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.
இந்தச் செய்மதியானது, சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் அது விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இந்தச் செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், நாளொன்றுக்கு 15 தடவைகள் பூமியை சுற்றி வலம்வரவுள்ளது.

இந்தச் செய்மதியின் வேகம் வினாடிக்கு 7.6 கிலோமீற்றராகும்.

குறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும், அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து குறித்த செய்மதியை ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.