ஒரே நாளில் 210 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில், 520 பேர் கைது, 12 பேர் பலி.


கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 210 பேர் சிகிச்சைக்காக வருகை தந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவு பிரதிப் பணிப்பாளர்  டொக்டர் சமின்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

நேற்று (13) தங்கிச் சிகிச்சை பெறுவதற்கு விபத்துப் பிரிவில் 108 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 11 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் டொக்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 23 பேரும், மது போதையின் காரணமாக வீழ்ந்து இருவர் மரணமடைந்துமுள்ளனர். துண்புறுத்தப்பட்ட நிலையில் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் கடந்த 24 மணி நேர காலப்பகுதிக்குள் பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் டொக்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை கடந்த 24 மணித்தியாலங்களில், போதையில் வாகனத்தைச் செலுத்தி 520 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 6 ஆயிரத்து 651 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.