தைரியமாக முன்னோக்கிச் சொல்வதற்காக எமது சிறார்களைப் பயன்படுத்துவோம.

இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் உலக சிறுவர் தினம் அல்லது விசேட சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

1856 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் உலகமெங்கும் ஜூன் 1ஆம் திகதியும் நவம்பர் 20ஆம் திகதியும் கொண்டாடப்படுகின்றது.

எனினும், இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்வருடத்திற்கான உலக சிறுவர் தினத்தின் தொளிப்பொருளாக தைரியமாக முன்னோக்கிச் சொல்வதற்காக எமது சிறார்களைப் பயன்படுத்துவோம் என்பது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

சகல சிறுவர்களினதும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இதே வேளை உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு திடசங்கற்பம் பூணுவோம் என பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.