மங்களவின் எரிபொருள் விலை சூத்திரம் பற்றி பல்வேறு கருத்துக்கள்.

எரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகிறார்.

நேற்று (19) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்படாத வகையிலும் விலைகளை நிர்ணயிக்கும் முறையை உருவாக்குவது போதுமானது என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எரிபொருள் விலை சூத்திரம் மக்களை ஏமாற்றுவதற்காக காண்பிக்கப்பட்ட ஒன்று என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதவிர எரிபொருள் விலை சூத்திரம் நியாயமான தர்க்க ரீதியான அடிப்படையில் இல்லை என்று பேராசிரியர் ரஞ்சித் பண்டார குறிப்பிடுகிறார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள எரிபொருள் விலைச் சூத்திரம் வெறுமனே ஏமாற்று வித்தையாகும் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.