சர்வதேச குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை மாணவன் மூன்றாம் இடம்

கடந்த ஆறாம் திகதி சவுதி மதீனா முனவ்வறாவில் நடைபெற்ற சர்வதேச குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை தர்ஹா நகரைச் சேர்ந்த முஹமட் அஸ்வர் அஹமட் ஹலீம் சிரேஷ்டப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

இவ்வருடம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கான போட்டியில் அஹமட் ஹலீம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் சவுதி அரசால் இலங்கையிலிருந்து திறமையான மாணவர்களை போட்டிக்கு அனுப்புமாறு கோரியதற்கு அமைய இவரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவு செய்து அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 82 நாடுகள் பங்குபற்றிய இப்போட்டியில் இலங்கை தர்ஹா டவுன் இல்ஹாருல் இஸ்லாம் அரபுக் கலாசாலையின் மாணவன் ஹலீம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். இப்போட்டியில் சேர்பிய நாட்டு மாணவன் முதலாம் இடத்தையும், இரண்டாம் இடத்தை பொஸ்னிய நாட்டு மாணவனும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திணைக்களத்தினால் நடாத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை சவுதி, துபாய், மலேசியா, எகிப்து, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்ற திணைக்களம் சந்தர்ப்பங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
*ThaiTv News*

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.