மீண்டும் இந்தோனேசியாவில் இன்று அதிகாலை நில அதிர்வு...!!

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மீண்டும் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

தென் இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவுக்கு அருகில் 6.2 மெக்னிரியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகி இருக்கிறது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதேவேளை, இந்தோனேசியாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களை புதைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுலாவெசி தீவில் அதிகபடியான மக்கள் உயிரிழந்தனர்.

சில பின்தங்கிய பிரதேசங்களில் இன்னும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

அங்கு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது, இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பலு நகரில் இடிபாடுகளுக்கு இடையில் நூற்றுக் கணக்கானவர்கள் சிக்கி இருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் கனரக இயந்திரங்கள் போதாமை காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.