இலங்கையை அச்சுறுத்தும் அடைமழை! 3 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!!!

நாட்டின் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக, தேசிய கட்டிட ஆய்வு பணிமனை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவு, மாத்தளை மாவட்டத்தின் உக்குவலை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கண்டி மாவட்டத்தின் கங்கவட்ட கொரலை பிரதேச செயலகப் பிரிவு என்பவற்றில் மண்சரிவு அபாயம் நிலவுகிறது.

இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மண் மற்றும் கல் சரிவுகள் தொடர்பில், நிலத்தாழிறக்கம் போன்றன தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை இன்றைய தினம் மேலும் அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.