சீரற்ற காலநிலையால் 237,940 குடும்பங்களைச் சேர்ந்த 803,516 பேர் பாதிப்பு; 5 பேர் பலி.

நாட்டில் தொடரும் சீரற்ற கால­நிலையினால் மக்களின் இயல்­புவாழ்க்கை பாதிப்படைந்­துள்ளதுடன் 237,940 குடும்பங்­களை சேர்ந்த 803,516 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ள­தோடு ஐவர் பலியாகியுள்­ளனர்.

இவை தவிர மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள­துடன் 1,046 வீடுகள் பகுதிய­ளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சீரற்ற காலநிலை அடுத்த சில தினங்களுக்கும் தொடரும் என்பதால் மலைப்­பாங்கான மற்றும் சரிவுகள் ஏற்­படும் அறிகுறிகள் தென்படும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்­ளது.

அதிகரிக்கும் மழைவீச்சியின் காரணமாக பல பாகங்களில் நீர்த்­தேக்கங்களிலும் நதிகளிலும் நீரின் அளவு அதிகரித்து வரு­கின்றது. இவ்வாறு நீர் மட்டம் அதிகரித்தாலும் வெள்ளம் ஏற்­படும் அபாயம் இதுவரையில் ஏற்படவில்லை. நீர்த்தேக்கங்­களின் நீர்மட்டங்களும் சடுதி­யாக அதிகரித்திருக்கவில்­லையென தெரிவிக்கப்படு­கின்றது.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் நேற்று பெய்த கடும் மழையினால் கொழும்பு உள்ளிட்ட பல நகரங்­களின் புற வீதிகள் நீரில் மூழ்­கியுள்ளதாக இடர் முகாமைத்­துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்­பிலி கேசரி வாரவெளியீட்­டுக்குத் தெரிவித்தார்.

இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பாரியளவு அனர்த்தங்கள் ஏற்படவில்லையென்றும் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.