மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணி இன்று.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியும் அவர்களின் ஆதரவுடனான புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து இன்று புதன்கிழமை கொழும்புக்கு மக்கள் சக்தி என்ற பாரிய பேரணி ஒன்றை தலைநகரில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப் பேரணியில் 75000 பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக் காரர்களால் சுற்றிவளைக்கப்படவுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக் காரர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளதாகவும் முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் பரிகார பூஜைகளும், தெய்வ பரிகார நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸாரால் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டை பிளவுபடுத்துதல், இராணுவத்தினரை வேட்டையாடுதல், மத்தலை விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சி, சிங்கப்பூர் ஒப்பந்தம், வாழ்க்கைச் செலவு உயர்வு, அதிகரித்த வரிச் சுமை, மத்திய வங்கி பிணை முறி மோசடி, மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு பிற்போடுகின்றமை உள்ளிட்டவற்றுக்கு எதிராகவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு கோரி பொலிஸார் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மூன்று மனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன. மேலும் இன்று கோட்டை பொலிஸார் கோட்டை நீதிவான் நீதிமன்றிடம் தடை உத்தரவொன்றினை கோரவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆர்பாட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு, பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டால் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.