நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருட்களின் விலையில் மாற்றம்.

எரிபொருட்களின் விலை நேற்று  முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 149 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 161 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 123 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 130 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 164 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 123 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 133 ரூபாவாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.