கண்டி வன்முறை சம்பவம்; அமித் வீரசிங்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.

கண்டி காவற்துறை பிரிவில் கடந்த தினத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரும் எதிர்வரும் 21ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தெல்தெனிய பதில் நீதவான் வருணி யாபாரத்ன முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் போது , பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

நேற்றைய வழக்கிற்கு அமித் வீரசிங்க அனுராதபுர சிறைச்சாலையிலிருந்தும் ஏனைய 7 நபர்களும் தும்பர சிறைச்சாலையிலிருந்தும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் கண்டி திகன, தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற இன வன்முறை தொடர்பில் மஹாசொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.