கூட்டு எதிர்ககட்சியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு பேரணியை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெயியாகியுள்ளது.
சற்று முன்னர் நிறைவடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் , பேரணியில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் பிற்பகல் 3 மணியளவில் இணைந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment