இந்தோனேசியாவை நேற்று தாக்கிய பயங்கர சுனாமி..!

இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 2 மீற்றர் உயரத்துக்கு ஆழிப்பேரலை சுலாவசி தீவின் பலு என்ற பகுதியை தாக்கியுள்ளதாக வௌிநாட் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியாவின் சுலாவசி தீவில் நேற்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷிய பேரிடர் நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

2 மீற்றர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது.

இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின.

திடீரென கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது.
இதில் பள்ளிவாசல் ஒன்று பலத்த சேதமடைந்தது. மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். மாடிகளில் தஞ்சமடைந்தனர்.

இருப்பினும் ஆர்பரித்து வந்த சுனாமி பேரலை கடற்கரையோ கட்டிடங்களை தாக்கியது.

இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சுனாமியால் பலு பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுனாமியை தொடர்ந்து பல்வேறு தீவுகளில் உள்ள மக்களும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சுனாமியால் 3 மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
இதில் கரையோரங்களில் இருந்த வீடுகள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த மகிழூர்திகள் பலத்த சேதமடைந்தன.

உயிர் பலி, பொருட் சேதம் உள்ளிட்டவை குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும் சுனாமி பெரும்பாலான கடற்கரையோர நகரங்களை தாக்கியுள்ளதால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.