7வது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!!

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெரும் போராட்டத்தின் மத்தியில் இறுதிப் பந்தில் வெற்றிபெற்றது.

துபாயில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் லிடொன் தாஸ் 121 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணிசார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கட்டுக்களையும் , கேதர் யாதவ் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 223 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 7 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில், ஆட்டத்தின் இறுதிப் பந்தில் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

தினேஸ் கார்த்திக் 37 ஓட்டங்களையும் , மகேந்திர சிங் தோனி 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஸ் அணி சார்பில் ரூபல் ஹொசைன் 2 விக்கட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக லிடொன் தாஸ் தெரிவு செய்யப்பட்ட நிலையில் , தொடராட்ட நாயகனாக சிகர் தவான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றின் மூலமாக ஆசிய கிண்ணத்தை 7ஆவது முறையாக கைப்பற்றிய பெருமையை இந்திய அணி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.