பதுளை பேரூந்து விபத்துக்கான காரணம் வௌியானது!!

பதுளை - அலுகொல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சிறுவனொருவர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்திருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் , குறித்த விபத்தின் பின்னர் பேரூந்தின் சாரதி பேரூந்தினுள் சிக்கியிருந்த நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பதுளை டிப்போவுக்கு சொந்தமான இந்த பேரூந்தின் சாரதி வீதியில் வேறொரு வாகனத்திற்கு இடம்கொடுக்க முயற்சித்துள்ள நிலையில் , பேரூந்து இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் , 15 வயதுடைய கந்தேகெதர பிரதேசத்தை சேர்ந்த மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவர் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக பயணித்துள்ள நிலையிலேயே இந்த அனர்த்ததிற்கு முகங்கொடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.