க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்; பொலிஸார் விசேட பாதுகாப்பு!!

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கள் இன்று ஆரம்பமாகிறது.

இன்று ஆரம்பமாகும் பரீட்சை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,21,469 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அத்தோடு, இம்முறை பரீட்சையில், 3 மணித்தியால வினாத்தாளுக்காக மேலதிகமாக 10 நிமிட வாசிப்பு நேரம் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள், தமது ஆள் அடையாள அட்டைகளை எடுத்துச்செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளார்.

முறைப்பாடுகள் ஏதேனும் காணப்படுமாயின் அது குறித்து அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1029 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியச்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

மேலும், பரீட்சைகள் நடைபெறும் பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget