மாளிகாவத்தயில் துப்பாக்கி சூடு; முஸ்லிம் நபர் ஒருவர் காயம்.

மாளிகாவத்த ஜூம்மா பள்ளிக்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் 2013ஆம் ஆண்டு காவல்துறையின் விசேட படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியான பாதாள உலக குழுவின் தலைவரான மாகஸ்மி காதர் மொஹமட் ஹஸ்மில் என்பவரின் சகோதர் மொஹமட் ரவுப் என தெரிவிக்கப்படுகிறது.

உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்தவர் 33 வயதானவர் எனவும் இவர் கப்பம் பெறும் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி மாளிகாவத்த ஜும்மா பள்ளி சந்திக்கு அருகில் உந்துருளியில் வந்தவர்களால் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 31 வயதான முஸ்லிம் பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.