ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதி­மன்றை அவமதித்ததாக கூறி, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று மேன் முறையீட்டு நீதி­மன்றினால் அறிவிக்கப்படவுள்­ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, அர்ஜுன ஒபே­சேகர ஆகியோர் முன்னி­லையில் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்­பெற்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்­கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் இடைநடுவே கலகம் ஏற்ப­டுத்தும் வண்ணம் நடந்து­கொண்டு நீதிமன்றை அவமதித்­ததாக அப்போது ஹோமாகம பிரதான நீதிவானும் தற்போ­தைய கொழும்பு பிரதான நீதிவானுமாகிய ரங்க திஸா­நாயக்க ஊடாக ஞானசார தேர­ருக்கு எதிராக மேன்முறை­யீட்டு நீதிமன்றில் முறையி­டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நீன்ட விசார­ணைகள் இடம்பெற்று வந்த நிலையில் முறைப்பாட்டாளர் தரப்பு, பிரதிவாதி தரப்பு, சாட்சி விசாரணைகளும் தொகுப்புரைகளும் நிறைவ­டைந்துள்ள நிலையிலேயே தீர்ப்பு இன்று அறிவிக்கப்­படவுள்ளது.

இந் நிலையில் நேற்று திடீ­ரென சுகவீனமுற்ற பொது பலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஸ்ரீ ஜய­வர்தனபுர வைத்தியசா­லையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நேற்று ஞானசார தேரருக்கு வைத்தியசாலையில் பல பரி­சோதனைகள் முன்னெடுக்கப்­பட்டுள்ள நிலையில் இன்று சத்­திர சிகிச்சையொன்றுக்கு உட்படுத்தப்படலாம் என வைத்தி­யசாலை தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.