பள்ளத்தில் பாய்ந்தது அரச பேருந்து ஒருவர் பலி – பலர் படுகாயம்.

பஸ் வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் பதுளை - அலுகொல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியே பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.


விபத்தில் காயமடைந்த 27 பேர் வைத்தியலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்துத் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.